தேசிய முன்னணிக்கு தொடர்ந்து பிபிபி கட்சி முழு ஆதரவை வழங்கும்! டத்தோ டாக்டர் லோகபாலா அறிவிப்பு

ஈப்போ செப் 8-
தேசிய முன்னணியுடனான பிபிபி கட்சியின் உறவு நீடிக்கும் என்று அதன் தலைவர் டத்தோ லோகபாலா அறிவித்தார்.

கஷ்டங்களை எதிர்நோக்கும் போது உடன் இருப்பதுதான் நியாயம். நாங்கள் விலகமாட்டோம்.

தேசிய முன்னணிக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவோம் என்று ஈப்போவில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்ற பேராக் பி்பிபி கட்சியின் மாநில மாநாட்டில் தலைமை உரையாற்றியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

ஒரு சமயத்தில் எங்களது கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் தேசிய முன்னணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.

பெரும் பான்மையான உச்சமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை முறியடித்தோம்.

தேசிய முன்னணி எங்களுடைய ஆதரவு தேவையில்லை என்றால் அதில் இருந்து விலகி தனித்து நின்று மக்களுக்காக எங்களின் சேவையை தொடருவோம்.

முன்னதாக மாநாட்டில் உரையாற்றிய டத்தோ லோகபாலா, மக்கள் முற்போக்கு கட்சியான பிபிபி மக்கள் நலனை கருத்தில் கொண்டு சேவை வழங்கி வருகிறோம் .

ஆகவே மக்கள் எதிர்நோக்கும் பொருள் விலை ஏற்றத்தைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles