
பெந்தோங், செப் 8-
பகாங் மாநிலத்தில் பெந்தோங் தோட்டத்தில் அருள் பழித்துக் கொண்டிருக்கும் கொண்டிருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழாவை முன்னிட்டு பெந்தோங் தொகுதி ம இகா தலைவர் டாக்டர் ஜெயேந்திரன் நிதியுதவி வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஜெயேந்திரன் வழங்கிய நிதியுதவிவை கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த சந்திரன் இராமசாமி பெற்று கொண்டார்.
கோவில் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற இந்த நிதி நிர்வாகத்திற்கு பெரிதும் துணை புரியும் என்று டாக்டர் ஜெயேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
பகாங் மாநிலத்தில் உள்ள இந்து கோவில்களின் மேம்பாட்டுக்கு ம இகா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருவதாக அவர் சொன்னார்.

