மக்கள் சக்தி கட்சியில் இருந்து முற்றாக விலகுகிறேன் மணிவண்ணன் அறிவிப்பு

மா.பவளச்செல்வம்

கோலாலம்பூர் செப் 9-
மக்கள் சக்தி கட்சியின் தேசிய உதவித் தலைவர், பேராக் மாநில தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மூன்று மாதத்திற்கு என்னை நீக்கியது அநியாயம் என்று மணிவண்ணன் மதுரைவீரன் தெரிவித்தார்.

மக்கள் சக்தி கட்சிக்கு கடந்த 16 ஆண்டுகள் உழைத்தேன்.

ஆனால் பழிவாங்கும் படலத்தில் என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்.

என் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.

காரணம் கோரும் கடிதமும் எனக்கு அனுப்பவில்லை.

இருப்பினும் என்னை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள்.

பேராக் மாநிலத்தில் மக்கள் சக்தி கட்சியின் வளர்ச்சிக்கு 16 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன்.

இப்போது பெருத்த வேதனையோடு கட்சியை விட்டு விலகுகிறேன்.

பேராக் லுமூட் தொகுதியில் என்னுடன் சேர்ந்து 1,500 உறுப்பினர்கள் மக்கள் சக்தி கட்சியில் இருந்து அடியோடு விலகுகிறார்கள் என்று இன்று கோலாலம்பூர் மெட்ராஸ் காபே உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles