பேரா மாநில இந்து சங்கத்தின் இந்து சங்கத்தின் 47 ஆம ஆண்டு திருமுறை விழா ! 760 மாணவர்கள பங்கேற்றனர்

ஈப்போ செப் 9-
பேரா மாநிலத்தில் இந்து சமய வளர்ச்சிக்கு ஆலயங்கள் , தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு மாநில அரசாகம் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருவதாக என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கூறினார்.

இம்மாநிலத்தில் சில இடங்களில் தனியார் மற்றும் அரசாங்க நிலங்களில் உள்ள அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயங்கள் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

உடைபடும் அபாயத்தைக் எதிர்நோக்கும் ஆலயங்களுக்கு மாற்று இடங்களை பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில நேரங்களில ஆலயங்களில அதற்கு ஆலய பொறுப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார்

பேரா மாநிலத்தில் தம்முடைய அனுமதியின்றி எந்த ஆலயமும் உடைபடாது, அவைகளுக்கு பிரச்சனை எழுந்தால் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபுற்ற பேரா மாநில இந்து சங்க 47 ஆவது திரு முறை விழாவை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் சிவநேசன் இவ்வாறு பேசினார்

இந்த நிகழ்வை நிறைவு செய்ய பிரதமரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன்
கலந்துக் கொண்டார்.

அவர் ஆற்றிய உரையில் , சமய வளர்ச்சிக்கு, பிரதமர் இந்து சமய வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டிப பேசினார்.

ஈப்போ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற திருமுறை ஓதும் விழாவில் 760 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இதில் தேர்வுப் பெறும் மாணவர்கள் தலை நகரில. நடைபெற விருக்கும் தேசிய நிலை திரு முறை ஓதும் போட்டியில் பங்கேற்பர் என்று மாநில இந்து சங்க தலைவர் தலைவர் பொன். சந்திரன் கூறினார்.

மாநிலத்தில் இந்து சமய வளர்ச்சிக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்
அ. சிவநேசன் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இதில் சிறப்பு வருகை புரிந்த தேசிய இந்து சங்க உதவித் தலைவர் டத்தோ மோகன் ஷான் , இந்து சமயம் இந்த நாட்டில் தொடர்ந்து வலுவுடன் இருக்க இந்துகள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்…

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles