

கோலாலம்பூர் செப் 15-
டமான்சார காயூ ஆரா கொல்லிமலை மாசி பெரியண்ணன் சுவாமி கோவில் வருடாந்திர திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
கடந்த ஆண்டுகளை போல் இவ்வாண்டும் ஆலய திருவிழாவில்ஆயிரக்கணக்கான பக்தர்கள்கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


அண்ணன் மாலை முனி, செல்லம், ராஜேந்திரன் சகோதரர்களின் தலைமையில் இந்த கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பிற்பகலில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.
புக்கிட் கியாரா மண்ணின் மைந்தர் யாங் பெர்பகிஹியா மனோ பரமசிவம், புக்கிட் கியாராவைச் சேர்ந்த டாக்டர் ரவி பரமசிவம் உட்பட பலரும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.
கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு பக்தர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணன் மாலை முனி தெரிவித்தார்

