

கோலாலம்பூர் செப் 25-
மலேசிய திருநாட்டில் மிகவும் பழமை வாய்ந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
இருமொழி கல்வி திட்டத்தை (டி.எல்.பி) நடைமுறைப்படுத்திய முன்னணி தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாகும்.
எட்டு வகுப்பறைகள் கொண்ட இந்த பள்ளியில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதில் 7 மாணவர்கள் மற்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் முனைவர் DR மகா கணபதி தெரிவித்தார்.
மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுமார் 25 லட்சம் வெள்ளியில் மூன்று மாடிகள் கொண்ட 12 வகுப்பறைகள் கட்டப்படுகிறது.
இதில் சுகாதார அறையும் Kesihatan மற்றும் புத்தக கடையும் இடம் பெறுகிறது.
3 லட்சத்து 13 ஆயிரம் வெள்ளியில் கட்டப்பட்ட சிற்றுண்டி சாலை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று 12 வகுப்பறைகள் கொண்ட இணைக் கட்டடத்திற்கான பூமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றதாக முனைவர் DR மகா கணபதி தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
ஆகம முறைப்படி நடைபெற்ற இந்த பூமி பூஜை விழாவில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இணைக் கட்டடம் கட்டுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் மூலம் கடந்த ஆண்டு 2 லட்சம் வெள்ளி மானியம் வழங்கினார். இந்த தருணத்தில் பிரதமருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மகா கணபதி கூறினார்.
இணைக் கட்டடம் கட்டுவதற்கு நிதி தேவைப்படுகிறது. அந்த வகையில் பிரதமரை தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்கு வரவழைக்க அனைத்து ஏற்பாடுகளும் முறையே செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
இன்றைய விழாவில் கலந்து கொண்ட சண்முகம் மூக்கன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி இணைக் கட்டடம் கட்டுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்து தரும் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

