காவல்துறையின் சேவை சிறப்பாக உள்ளது – கேட்கும் உதவிகளை நிறைவாய் செய்கிறார் சிவநேசன்!!

சுங்கை,செப்25: சுங்கை காவல்நிலையம் சிறப்பான சேவை வழங்கி வரும் நிலையில் அக்காவல்நிலையத்தின் ஒவ்வொரு தேவைகளையும் சுங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் நிறைவாகவே செய்து வருகிறார்.

சுங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதையும் நினைவுக்கூர்ந்து சிவநேசன் காவல்நிலையங்கள் முன் வைக்கும் தேவைகளை அவ்வப்போது நிறைவாக செய்து கொடுத்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கை காவல்நிலையத்திற்கு மேசைகள்,நாற்காலி உட்பட பல்வேறு தளவாடப் பொருட்களை அதன் தலைவர் சார்ஜன் ரூஸ்மாடி பின் இரம்லி கோரிக்கை வைத்த நிலையில் அதனை இன்று சிவநேசனின் சார்பில் காவல் நிலையத்தில் வழங்கப்பட்டது.

சுங்கை காவல்நிலையத்தின் சார்பில் அப்பொருட்களைப் பெற்று கொண்ட பின்னர் மாண்புமிகு சிவநேசனுக்கு அவர்கள் நன்றியும் பகிர்ந்தனர்.

மேலும்,சுங்கை காவல் நிலையம் மட்டுமின்றி பீடோர் காவல் நிலையம் மற்றும் தாப்பா மாவட்ட காவல் நிலையத்திற்கும் தொடர்ந்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை ஆக்கப்பூர்வமாக வழங்கியும் வருகிறர்.

அண்மையில் கூட தாப்பா மாவட்ட காவல்நிலையத்தின் கோரிக்கைக்கு ஒப்ப மரம் வெட்டும் இயந்திரங்கள்,மருந்து தெளிக்கும் இயந்திரம் ஆகியவற்றையும் அவர் வழங்கியுள்ளார்.

காவல்துறையினரும் இந்தச் சமூகத்தில் ஒருவர்கள் தான்.அவர்களும் சிறப்பான சூழலில் தங்களின் கடமையை ஆற்ற வேண்டும்.அவர்களுக்கு அத்தகையச் சூழலை நாம் உருவாக்கி கொடுக்கவும் வேண்டும் எனவும் சிவநேசன் கூறினார்.

சுங்கையை பொருத்தமட்டில் கடந்த்க காலங்களோடு ஒப்பிடுகையில் குற்றவியல் சம்பவங்கள் குறைந்துள்ளதால் தாம் வழங்கும் இவ்வுதவிகள் காவல் துறையினரை பாராட்டி அங்கிகரிக்கும் வகையிலானது என்றும் தெரிவித்தார்.

காவல் துறைக்கும் காவல் நிலையங்களுக்கும் சிவநேசன் வழங்கி வரும் சேவையும் உதவியும் ஆக்கப்பூர்வமானது என்றுரைக்கும் காவல் துறையினர் அவரது பெரும் பங்களிப்பிற்கு நன்றியும் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles