
கோலாலம்பூர், செப் 26-
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியை முன்னிட்டு கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் சார்பில் நவசக்தி நவ விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இவ்வாண்டு 52 ஆவது ஆண்டை முன்னிட்டு நவசக்தி நவ விழா 22-9-2025 ஆம் தேதி முதல் 2-10-2025 ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது என்று இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தெரிவித்தார்.
இன்று 5 ஆம் நாள் நவசக்தி நவவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மலேசிய நகரத்தார் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் – டத்தின் மீனாட்சி குடும்பத்தினர் மற்றும் சம்பு லிங்கம் – கமலேஸ்வரி குடும்பத்தினர் உபயத்தை ஏற்று நடத்தினர்.

நாட்டில் புகழ்பெற்ற தஞ்சை கமலா இந்திரா நாட்டிய பள்ளி மாணவிகள் நடனங்கள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
டத்தோ இராமநாதன் உட்பட உபயக்காரர்கள் அனைவருக்கும்
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாசார இயக்கத்தின் தலைவர் ஜி.சேகர் தலைமையில் பரிவட்டம் கட்டி சிறப்பித்தனர்.

இன்றைய விழாவில் டத்தோ பாஸ்கரன் குடும்பத்தினர் அனைவருக்கும் சுவையான அன்னதானம் வழங்கினர்.
வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும் அக்டோபர் 1 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் மற்றும் அக்டோபர் 2 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண திருக்கோலம் வீதி ஊர்வலமும் நடைபெறுகிறது.
கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கத்தின் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் ஐ.ரமணி, துணை தலைவர் டாக்டர் தேவிகா, செயலாளர் அமரேசன், துணை செயலாளர் முருகராஜ், பொருளாளர் கண்ணன், செயலவை உறுப்பினர்கள் மீனா, ஹேமாலதா, கண்ணன், ராமு, துளசி குணசேகரன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு நவசக்தி நவவிழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் நவசக்தி கலை என்பது, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் செயல்படும் ஒரு கலாச்சார இயக்கமாகும் .
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி போன்ற சமய விழாக்களை முன்னிட்டு நவசக்தி நவவிழா போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்து, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக செயல்பாடுகளை வளர்க்கும் ஒரு அமைப்பாக விளங்குகிறது.

மலேசியாவில் வாழும் தமிழர்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த சங்கம் செயல்படுகிறது என்று துணை தலைவர் திருமதி டாக்டர் தேவிகா தெரிவித்தார்.நவராத்திரி விழா: ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியை முன்னிட்டு, இந்த அமைப்பு “நவசக்தி நவவிழா” என்ற விழாவை நடத்துகிறது.
கோலாலம்பூரில் உள்ள தமிழ் மக்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய கலாச்சார அமைப்பே கோலாலம்பூர் நவசக்தி கலை கலாச்சார இயக்கமாக இயங்கி வருகிறது.

