
சிரம்பான், செப் 27-
குருநாதர் ஓங்காரக் குடிலாசான் மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் கடந்த 17-9-1976 இல் சிவ தீட்சை பெற்று தமது தவ வாழ்க்கையை தொடங்கினார்கள்.
இதனை முன்னிட்டு 28-9-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் சிரம்பான் ஜாலான் யாம் துவான் ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோவில் கூடத்தில் ஓங்காரக் குடிலாசான் மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு தீட்சை நிறைவு விழாவும் குரு பூஜையும் மகான் பதஞ்சலி யார் சன்மார்க்க சங்கம் போர்ட் டிக்சன் கிளை (மலேசியா) நடைபெறுகிறது.
இந்த விழாவில் உண்மை ஆன்மீக சிறப்பு சொற்பொழிவும் சித்தர் பாடல் இன்னிசையும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் இடம் பெறும்.

அதேசமயம் ஞானிகளைப் பூஜித்த அருட்பிரசாத அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்படும். இந்த குரு பூஜையில் எல்லாம் வல்ல ஞானியர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு ஆசி வழங்குவார்கள்.
கும்பமுனி என்றும் குருமுனி என்றும் அகத்தீசர் என்றும் பெயர் பெற்ற அகத்திய மகரிஷியின் ஆசி பெற நவகோடி சித்தர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு ஆசி வழங்குவார்கள்.
மகான் அகத்தீசரையும் மகான் நந்தி சரையும் மகான் திருமூல தேவரையும் மகன் கருவூர் முனிவரையும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகளையும் பூஜித்து அருட்பிரசாத அன்னதான (உணவு) வழங்கப்படும்.
மிகப் பெரிய அளவில் நடைபெறும் இந்த தீட்சை விழா குரு பூஜையில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசான் அகத்தீசரின் ஆசியை பெறும்படி விழா ஏற்பட்டு குழுவினர் கேட்டுக் கொள்கிறார்கள்.
அகத்தீசன் திருவிழா மற்றும் அன்னதானப் பெருவிழா குறித்து மேலும் தகவல் களுக்கு வி.முனியாண்டி 019-2398742, வள்ளியம்மா 010-2422741, கோபால் சாந்தி 017-6132321 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

