
சென்னை: செப் 30-
அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் கரூருக்கு வருவதை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர்.
இதன் விளைவாக அதிக கூட்டம் காரணமாக மிதிபடுதல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 அப்பாவி மக்கள் உயிரிழந்ததாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தவெக தலைவரும் நடிகருமான விஜய் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது