
மூடா கட்சி ஏற்பாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலாட்டா செய்த அம்னோ உறுப்பினர்களை டுவிட்டரில் பதிவு ஏற்றம் செய்தது தொடர்பில் பெந்தோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் யோங் சைபுராவின் உதவியாளர் நூர் இஷாக் மற்றும் பண்டான் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லியின் பத்திரிகை செயலாளர் பார்ஹான் இக்பால் ஆகியோரை விசாரணைக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் புத்ரா ஜெயா போலீஸ் நிலையத்திற்கு வரும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி கருத்துரைத்த கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலாட்டா செய்தவர்கள் மீது போலீசார் விசாரணை நடத்த வேண்டும் தவிர இவர்கள் மீது அல்ல.
கலாட்டா செய்பவர்களை துணிந்து கேள்வி கேட்பவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டால் அது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்

