
பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சுமார் 12 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் அங்காடி கடைகள் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.
இந்த கடைகள் அகற்றப்பட்டால் இங்கு காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்.
இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மனித வள அமைச்சர் வ. சிவகுமார் முன் வர வேண்டும் என்று மீரா கட்சி தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று மனித வள அமைச்சர் சிவகுமாரை அவரது அமைச்சில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இந்த அங்காடி வியாபாரிகளை சந்திக்க ஏற்பாடுகளை செய்யும் படி அமைச்சர் சிவகுமார் என்னை கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் மாநகர் மன்றம், விலாயா மாநில அமைச்சு மற்றும் மேம்பாட்டாளர்களுடன் சமூகமான பேச்சு வார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணலாம் என்று அவர் கேட்டுக் கொண்டதாக டத்தோ சந்திரகுமணன் தெரிவித்தார்.
இதனிடையே இந்தியர்கள் எதிர் நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் மனித வள அமைச்சர் வ. சிவகுமார், கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற மீரா கட்சி தயாராக இருக்கிறது.
இந்திய சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளை நம்மால் ஒன்றுகூடி தீர்வு காண முடியும்.
அந்த வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுவோம் என்றார் அவர்.

