

கோல சிலாங்கூர் , அக் 14-
குறைந்த மாணவர்கள் எண்ணிக்கையிலான தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று
மஹிமா தலைவரும் டிஎஸ்கே சமுக நல அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுங்கை தெராப் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டத்தில் மகிழ்ச்சி. டிஎஸ்கே அமைப்பின் வாயிலாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர் ஆகியோருக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
அதே வேளையில் இப்பள்ளியில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் எண்ணிக்கை குறையாக இருந்தாலும் இப்பள்ளி தரமான பள்ளியாக உள்ளது. இவ்வேளையில் தலைமையாசிரியர் கன்னியம்மாள் உட்பட பள்ளி நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப்பள்ளிகள் நாம் பாதுகாக்க வேண்டும். குறைந்த மாணவர்கள் இருந்தாலும் இப்பள்ளி தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் என்றார்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் நாராயணசாமி இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

