
காஜாங், அக் 15-
சமூகநல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல நல்ல சேவைகள் செய்து வரும்
Kelap Rekreasi Dan Kebajikan Madani அமைப்பு கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.
காஜாங்கில் உள்ள பிரபல உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் Kelap Rekreasi Dan Kebajikan Madani அமைப்பு ஆயிரம் பேர் முன்னிலையில் திறப்பு விழா கண்டு சாதனை படைத்தது.
நாடாறிந்த சமூக சேவையாளர் முருகன் தலைமையில் Kelap Rekreasi Dan Kebajikan Madani அமைப்பினர் பல வகைகளில் வசதி குறைந்த மக்களுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வசதி குறைந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள், சமூக நல இல்லங்களுக்கு உதவிகள் என்று பல வகைகளில் Kelap Rekreasi Dan Kebajikan Madani சேவையாற்றி வருகிறது.
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Kelap Rekreasi Dan Kebajikan Madani அமைப்பு மிகப்பெரிய அளவில் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்

