
பல இனங்களைக் கொண்ட மலேசியாவில், இந்தியர்களும் ஒரு முக்கியமான சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 90 சதவீதம் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தெரிவித்துக் கொண்ட பெர்சாத்து கட்சியின் மலாய்காரர் அல்லாதோருக்கான பிரிவின் மாநில உச்ச மன்ற உறுப்பினர் திரு சந்திர சேகரன், அனைத்து இந்து சமூகத்தினருக்கும் தனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து, அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியதாவது:
“தீய எண்ணங்களை அகற்றி, ஒற்றுமை உணர்வோடு அனைவரும் இணைந்து, சகோதரத்துவ உணர்வுடன் இந்த ஒளியின் திருநாளை கொண்டாட வேண்டும். இது நம் நாட்டிலும் மக்களிடையிலும் அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நாளாக அமையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, கூலாய் தொகுதி பெர்சாத்து கட்சியின் மலாய்காரர் அல்லாதோருக்கான பிரிவு (சாயாப்) தலைவருமான திரு சந்திர சேகரன், அனைவருக்கும் மகிழ்ச்சி, நலன், செழிப்பு நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

