டத்தோ” விருதை சிவநேசனும், டத்தோ ஸ்ரீ ஜனசந்திரனும் பெறுகின்றனர்.

ஈப்போ, நவ.7-
பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு 17 பிரமுகர்களுக்கு ” டத்தோ” விருது வழங்கப்படவுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அவர்களில், பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, சுகாதாரம், மனிதவளம், ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனுக்கும், போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஜனசந்திரன் முனியனுக்கும் ” டத்தோ” விருது வழங்கப்படவுள்ளது.

இரு நாட்களில் இந்த விருது வழங்கும் நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் விருது வழங்கும் நிகழ்வு வரும் 9.11.2025( ஞாயிற்றுக்கிழமை) பிரதான பிரமுகர்களுக்கு விருதுகள் கோலகங்சார் அரண்மனையில் வழங்கப்படும்.

அதனைத்தொடர்ந்து வரும் 15.11.2025( சனிக்கிழமை) இதர பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஈப்போ மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணத்துவ மருத்துவர் சிவநேஸ்வரன் லெட்சுமணனுக்கு பி.எம்.பி விருது வழங்கப்படவுள்ளது.

தைப்பிங் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கோகிலவாணி கிருஷ்ணனுக்கு ஏ.எம்.பி விருது வழங்கப்படவுள்ளது. தெலுக் இந்தான் மருத்துவமனையின் தலைமை தாதியர் மாரியம்மாவிற்கும், மூவாலிம் மாவட்ட தாதியர் பரமேஸ்வரி சின்னதம்பிக்கும் பி.பி.டி விருது வழங்கப்படுகிறது.

தைப்பிங் ரோட்டரி கிளப்தலைவர் டாக்டர் பூ. சுரேஷ்க்கும் பி பி டி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறார். ஈப்போவின் கனிமவளத்துறை பணியாளர் வெற்றிவேல் கோவிந்தசாமிக்கு பி.எல்.பி விருது வழங்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles