
மலாக்கா, நவ 7-
உலகம் இன்று மின்னல் வேகத்தில் செயற்கை நுண்ணறிவில் முன்னேறி கொண்டிருக்கும் தருணத்தில் மலேசியர்களும் பின் தங்கி விடாமல் இருக்க செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறைகள் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் (AI@Malacca) செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை மிகுந்த உற்சாகத்துடன் Hotel Tamara, Malacca இல் நடைபெற்றது .
இந்த கருத்தரங்கில் 160-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மலாக்கா மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நல அமைப்பு (Pertubuhan Kebajikan Pelajar India SJKT Negeri Malacca) ஏற்பாடு செய்திருந்த இந்த ஒருநாள் கருத்தரங்கின் நோக்கம், செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, டிஜிட்டல் திறன்கள், உற்பத்தித் திறன், மற்றும் அன்றாட வாழ்க்கை செயல்திறனை மேம்படுத்து வதாகும்.
இக்கருத்தரங்கில் பயிற்றுநர் ஜெய் கண்ணன், செயற்கை நுண்ணறிவு மூலோபாய நிபுணர் (AI Strategy Specialist) மற்றும் வணிக செயல்முறை நிபுணர் (Business Process Specialist) திரு . ராஜா ஆகியோர் வழிநடத்தினர்.
பங்கேற்பாளர்கள் ChatGPT, Deepseek உள்ளிட்ட பல்வேறு AI கருவிகளை நேரடியாகப் பயன்படுத்தும் அனுபவத்தை பெற்றனர்.
முழு அமர்வுகளிலும், கல்வி, வணிகம் மற்றும் அன்றாட பிரச்சினை தீர்வுகளில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு ஒருங்கிணைக்கப்படலாம் என்பதைப் பங்கேற்பாளர்கள் கற்றுக் கொண்டனர்.
இதன் மூலம் மலேசியாவின் டிஜிட்டல் மாற்றப் பயணத்துக்கு ஆதரவாக சமூகத்தில் விழிப்புணர்வு வலுப்பெற்றது.
மலேசிய டிஜிட்டல் அமைச்சர் மற்றும் DAP மலேசிய தலைவர் மதிப்பிற்குரிய YB கோபிந்த் சிங் தேவ் அவர்களின் சார்பில் சகோதரர் ஜி. சாமிநாதன் சிறப்பு பிரமுகரான கலந்து கொண்டு உரையாற்றினார்.
டிஜிட்டல் புதுமைகளை ஏற்றுக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அவர் ஊக்குவித்தார்.
இந்த பயிற்சி பட்டறையை YB கு பொய் தியோ ( DAP மலாக்கா தலைவர்) நிறைவு செய்தார்.
இந்திய சமூகத்தில் டிஜிட்டல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சிக்கு ஒழுங்கமைப்பாளர்களை அவர் பாராட்டினார்.
ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் நன்றிக்குறியாக “பங்கேற்புச் சான்றிதழ்” வழங்கப்பட்டது.
ஏற்பாட்டுக் குழுவினர், இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கும் நோக்கில் தொடர்ந்து ஆதரவளித்த YB கோபிந்த் சிங் தேவ் மற்றும் YB கு பொய் தியோங் ஆகியோருக்கு இதயப்பூர்வ நன்றியை தெரிவித்தார்.

