
எம் பவளப் செல்வம்
கோத்தா கினபாலு, நவ 6-
சபா மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கெஅடிலான் கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை திறக்கப்பட்டுள்ளது.
கெஅடிலான் கட்சியின் பிரச்சார குழுவின் உயர் மட்ட தலைவர் மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தற்போது சபாவில் களம் இறங்கி இந்த தேர்தல் பிரச்சார நடவடிக்கை அறையை பார்வையிட்டார்.

சிலாங்கூர் தேர்தல் குழுவின் உயர்மட்ட குழுவின் துணை இயக்குநர் சுரேஸ் மற்றும் துணை இயக்குநர் ஹனாஃபி ஆகியோர், சபாவின் கோத்தா கினாபாலுவில் உள்ள JPRN சிலாங்கூர் குழுவுடன் சேர்ந்து, சபா மாநிலத் தேர்தலுக்கான மக்கள் நீதிக் கட்சியின் பிரதான இயக்க அறையை பார்வையிட்டனர்.
JPRP இன் சகோதரர் ரஃபருடன் முக்கிய ஆலோசனையும் நடைபெற்றது.
சபா மண்ணில் தேர்தல் பிரச்சார பணி நம்பிக்கையுடனும் திறம்படவும் தொடர்ந்து நகர்வதை உறுதிசெய்ய ஒவ்வொரு உத்தியும் செம்மைப் படுத்தப்பட்டதாக டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் மாவட்ட கவுன்சில் புவனேஸ்வரன் பச்சைமுத்து, கலைமகள் உட்பட பலரும் இப்போது சபாவில் இருக்கிறார்கள்.

