நாட்டில் உள்ள இந்து கோவில் நிர்வாகம் டிஜிட்டல் முறையில் இயங்க மஹிமா – Grasp Software இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 9-
நாட்டில் உள்ள இந்து கோவில்களின் நிர்வாகம் டிஜிட்டல் முறையில் சிறப்பாக இயங்கும் வகையில் இன்று மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்களின் பேரவை மற்றும் Grasp Software மென்பொருள் நிறுவனம் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது புரிந்துணர்வு ஒப்பந்தம் மஹிமாவின் வரலாற்றில் சிறப்புக்குரிய நாள் என்று மஹிமா தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், நாட்டின் அனைத்து இந்து கோவில்களின் நிர்வாகத்தையும் டிஜிட்டல் முறையில் இயக்குவதற்கான புதுமையான தீர்வாக “Temple Management System” என்பதனை அறிமுகப்படுத்துகின்றோம்.

இதன் மூலம் கோவில்களின் நிர்வாகம், நிதி மேலாண்மை, கணக்கியல் மற்றும் ஆவண நிர்வாகம் ஆகியவை எளிமையாக்கப்படும்.

இந்த முயற்சியின் கீழ், மஹிமா, TEAM DSK, மற்றும் GRASP Software Solution Sdn. Bhd. ஆகிய நிறுவனங்கள் இணைந்து பணியாற்றுகின்றன என்று அவர் சொன்னார்.

அனைத்து கோவில்களும் இலவசமாக மென்பொருள் (Software) மற்றும் வன்பொருள் (Hardware Package) வசதிகளை பெறுகின்றன.

இருப்பினும் தொழில்சார் இயங்குவதற்கும், தொழில்நுட்ப உதவி மற்றும் பராமரிப்பு நிலைத்திருப்பதற்கும், ஒவ்வொரு கோவிலும் மாதாந்திர சந்தா மற்றும் மேலாண்மை கட்டணம் (Monthly Subscription & Management Fee) GRASP Software Solution Sdn. Bhd. நிறுவனத்துக்கு செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த Temple Management System மூலம் கோவில்கள் தங்களின் தினசரி பணிகளை முழுமையாக டிஜிட்டல் முறையில் (Paperless), நாணயமற்ற (Cashless), மற்றும் வெளிப்படையான (Transparent) முறையில் மேற்கொள்ளலாம்.

இந்த அமைப்பு, கையாளும் செய்முறையையும் செயல்முறையையும் நீக்கி, கோவில்களின் நிதி மற்றும் கணக்கியல் செயல்பாடுகளை எளிமைப்படுத்துகிறது.

இதன் மூலம் ROS கணக்குகள் சமர்ப்பிப்பதும், கோவில் அறிக்கைகள் தயாரிப்பதும், கணக்கியல் வெளிப்பாடுகளும் ஒருங்கிணைக்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles