
காளிதாஸ் சுப்ரமணியம்
மாணவர்கள், தொழில்முனைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை தலைமைத்துவ பண்பு கொண்டவர்களாக இந்த கிளப் உருமாற்றி வருகிறது.
பொது மேடையில் மன தைரியத்துடன் பேசுவது, பல்கலைக்கழகங்கள் அல்லது வேலை இடங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது போன்ற தன்முனைப்பு பயிற்சிகளை இந்த கிளப் வழங்கி வருவதாக ஷேர் அண்ட் இன்ஸ்பைரிங் தோஸ்த் மாஸ்டர் கிளப்பின் தலைவர் தொழிலதிபர் டத்தோ டாக்டர் சமனன் ரத்னம் கூறினார்.

இதன் மூலம் பல பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்முனைவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளதாக இன்று சன்வே லகூன் கிளப்பில் நடைபெற்ற தோஸ்த்மாஸ்டர் கிளப்பின் 2ஆம் ஆண்டு கொண்டாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.
இதனை இந்திய இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தாராளமாக இந்த கிளப்பில் அங்கத்தினராக சேர்ந்து கொள்ளலாம். உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இந்த கிளப் மூலம் ஆயிரங்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.

கல்வியிலும் தொழில்துறையிலும் வெற்றி பெற்ற நபர்கள் இந்த கிளப்பின் பொறுப்பில் இருக்கின்றனர். அவர்கள் கடந்து வந்த அனுபவங்களை கொண்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதே இந்த கிளப்பின் முதன்மை நோக்கமாகும்.
இக்கொண்டத்தில் சிறப்பு விருந்தினராக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கலந்து கொண்டார்.

இந்த கிளப்பின் செயல் நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்கால தலைவர்களை உருவாக்குக் வகையில் இருப்பதாக பாராட்டினார். அதோடு, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சமமான சேவைகளை வழங்கி தேசிய ஒற்றுமையை இந்த கிளப் புலப்படுத்துவதாக சிறப்புரையாற்றிய அவர் சொன்னார்.
ஆடல் பாடலுடன் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் கிளப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

