Gantian தொழிலாளர்களுக்கான நடைமுறை எளிதாக்க வேண்டும்!மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர், நவ.12-
Gantian எனப்படும் மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள நடைமுறைகள் எளிதாக்க வேண்டும் என்று மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என் கோபாலகிருஷ்ணன் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

நாட்டிலுள்ள தொழித் துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை விவகாரம் குறைந்த பாடில்லை. அதிலும் உணவு விற்பனை துறையில் உணவக உரிமையாளர் பெறும் பாடுபட்டு வருகின்றனர்.

தற்போது அரசாங்கம் மாற்றுத் தொழிலாளர் எனும் gantian முறையை அமல்படுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த முறைகான நடைமுறைகள் எளிதாக இருக்க வேண்டும் என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த விதிமுறைகள் ஒவ்வொரு அரசு துறைகளுக்கு ஒவ்வொரு விதமாக உள்ளது. இவை அனைத்தையும் செய்து முடித்து மாற்றுத் தொழிலாளர்களை பெறச் சென்றால் 10 பேருக்கு மூன்று அல்லது இரு பேர் மட்டும்தான் கிடைக்கிறது.

இந்த விவகாரத்தில் நம் உணவகத்தை விட்டு check out செய்யும் அந்நிய தொழிலாளர்களுக்கு மட்டுமே மாற்றுத் தொழிலாளர் வழங்கப்படுகின்றனர். சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என அவர் சொன்னார்.

கடந்த காலங்களில் இந்நிலை எங்களுக்கு இல்லை. 10 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றால் 10 மாற்றுத் தொழிலாளர்கள் எங்களுக்கு கிடைத்து விடும். ஆகையால் இதை அரசாங்கம் கவனிக்க வேண்டுமென பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷும் கூறினார்.

நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் தேவைகள் குறித்து அனைத்து தொழிலித்துறைகளில் எத்தனை பேர் தேவை என்பதை மொத்தமாக கணக்கு எடுப்பது அவசியமற்றதாகும். தனிப்பட்ட முறையில் உணவக துறைகளில் எத்தனை அந்நிய தொழிலாளர் இருக்கிறார்கள், மேலும் எவ்வளவு பேர் தேவை என்ற துள்ளிய விவரத்தை அரசு கொண்டிருக்க வேண்டும்.

ஆகையால் gantian முறையில் அரசின் அறிவிப்பு எங்களுக்கு அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு என்பது வரும்…ஆனா வராது என்பது போலதான் உள்ளது என பிரேஸ்மா அமைப்பின் தலைவர் டத்தோ மோசின் தெரிவித்தார்.

மேலும் அந்நிய தொழிலாளர்கள் குறித்த தகவல் தணிக்கைகள் முறையாக கண்காணிக்க பட வேண்டும். அவ்வபோது அந்த விவகரங்கள் புதுபிக்கப்படுவது அவசியம் என அவர் கூறியதுடன், அந்நிய தொழிலாளர்கள் தங்கும் இடம் விவகாரத்திலும் சில தளர்வுகள் அவசியம் என்றார் அவர்.

இதற்கிடையில், இந்திய தொழில்துறைகளுக்கான அந்நிய தொழிலாளர்கள் பற்றாக்குறை விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டு எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

மேலும் 15ஆவது மலேசிய திட்டத்தில் அந்நிய தொழிலாளர்களை 10% குறைப்பதை நாங்கள் ஏற்கிறோம். ரோப்போடிக், ஏஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியை எங்கள் தொழில் துறைகளில் அமல்படுத்த அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles