ஆசிரியை ஈஸ்வரி கல்வித்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்!

மஞ்சோங், நவ.12: நடந்து முடிந்த உப்சி பல்கலைக்கழகத்தின் 27 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் திருமதி ஈஸ்வரி நாகலிங்கம் கல்வித்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

குடும்ப வறுமை சூழ்நிலையையும் பொருட்படுத்தாது தனது கல்வி ஒன்றே இலக்காக கொண்டு, கடின உழைப்பால் வெற்றியும் பெற்றுள்ளார். ஒட்டு மொத்த PNGK 3.91 சிறந்த அடைவுநிலையையும் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது சொகமானாத் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சேவையாற்றிவரும் இவர் கடந்த வருடம் அறிவியல் பாடத்திற்கான நனி சிறந்த ஆசிரியராகவும் தேர்வு செய்யப்பட்டார்

இவர் தொடர் சாதனைகள் புரிய குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles