
காளிதாஸ் சுப்ரமணியம்
பத்தாங் காலி, நவ 14-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலு சிலாங்கூர் மாவட்ட சோன் பத்தாங் காலி கவுன்சிலர் ராஜேஷ் ராவ் ஏற்பாட்டில் தீபாவளி பொது உபசரிப்பு மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பத்தாங் காலியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு முக்கிய பிரமுகராக கலந்து சிறப்பித்தார்.

ஆடல் பாடல் இன்னிசை விருந்துடன் நடைபெற்ற இந்த உச்சரிப்பில் DAP கட்சித் தலைவர்கள், உலுசிலாங்கூர் தலைவர்கள், தொழில்முனைவோர்கள், பத்தாங் காலி வட்டார பொது மக்கள் என 600க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர் ராஜேஷ் ராவ் ஒவ்வொரு ஆண்டும் தவாறது இந்த தீபாவளி பொது உபசரிப்பை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற்ற தீபாவளி பொது உச்சரிப்பில் 80 வசதி குறைந்த மக்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
சிறுவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு மற்றும் பெரியவர்களுக்கு
சேலைகள், வேட்டிகள் வழங்கப் பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அங்கமாக 2026 ஆண்டுக்கான கவுன்சிலர் ராஜேஷ் ராவ் நாள்காட்டியை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்தாங் காலி வட்டார மக்களுக்கு கவுன்சிலர் ராஜேஷ் ராவ் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்று அவ்வட்டார மக்கள் தெரிவித்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு, கவுன்சிலர் ராஜேஷ் ராவ் செய்து வரும் மக்கள் பணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

