
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 14-
மலேசியத் தமிழ் பத்திரிகை துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நிருபர் முருகன் அவர்களின் மருத்துவ சிகிச்சை நிதிக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் 5,250 வெள்ளியை நிதியை திரட்டி தந்தது.
அதேசமயம் ம இகா தேசிய துணை தலைவர் மற்றும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் முருகனக்கு மருத்துவ நிதி 3,000 வெள்ளி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தமிழ் ஊடகத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முருகன் அவர்கள் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி நடந்த விபத்தில் வலது கையில் இரண்டு எலும்புகள் முறிவு கண்டது.
ஒரு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள வேளையில் மற்றொரு எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நிதி திரட்டப்பட்டது.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நிதி திரட்டப்பட்டது.
சங்கத்தின் சார்பில் பல நல்லுள்ளம் படைத்தவர்கள் நிதி வழங்கினர்.
ஆக மொத்தம் 5,250 வெள்ளி திரட்டப்பட்டது.
அந்த நிதி இன்று நேரடியாக முருகனிடம் வழங்கப்பட்டது.
மேலும் டத்தோஸ்ரீ எம். சரவணன் 3,000 அவர்கள்
முருகன் சிகிச்சை நிதிக்கு 3,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.
ஆக மொத்தம் இன்று மொத்தம் 8,500 வெள்ளி முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது .
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகின்ற டத்தோஸ்ரீ சரவணன் தலைமையிலேயே முருகனிடம் நிதி வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது.
நிதியைப் பெற்றுக் கொண்ட முருகன் தனக்கு உற்ற நேரத்தில் ஆதரவளித்து உதவுகின்ற பத்திரிகையாளர் சங்கத்திற்கும் நேரில் வந்து நிதியுதவி வழங்கிய டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
முருகன் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டிய மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் பணியை பெரிதும் பாராட்டுவதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், துணை தலைவர் காளிதாசன் தியாகராஜன், உதவித் தலைவர்கள் காளிதாசன் இளங்கோ, ஜீவா, ரவி முனியாண்டி, செயலாளர் வெற்றி விக்டர், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மூர்த்தி, காளிதாஸ் சுப்ரமணியம், இராமன் குட்டி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

