நிருபர் முருகன் தமிழகம் செல்ல விமான டிக்கெட் செலவை சத்யா சுதாகரன் ஏற்றுக் கொண்டார்!

கோலாலம்பூர் நவ 14-
மிக விரைவில் தமிழ் நாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிருபர் முருகன் அவர்கள் ஏர் மலிண்டோ மூலம் திருச்சி செல்ல விமான டிக்கெட் செலவை பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் ஏற்றுக் கொண்டார்.

அவருக்கு சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

மேலும் முருகன் தமிழகம் செல்ல இந்திய தூதரகத்திடம் பேசி அனுமதியும் சத்யா சுதாகரன் பெற்று தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முருகன் சிகிச்சை நிதிக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 5,250 வெள்ளி நிதி திரட்டி தரப்பட்டது.

அதேசமயம் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் 3,000 வெள்ளி வழங்கி பேருதவி புரிந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles