பத்துமலை இந்தியர் நற்பணி மற்றத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு AI பயிற்சி பட்டறை! முதல் கட்டமாக பத்துமலை தமிழ்பள்ளியில் 500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

காளிதாஸ் சுப்ரமணியம்

பத்துமலை, நவ 15-


தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஏஐ எனப்படும்
செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்க பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது.

பத்துமலை இந்தியர் நற்பணி மன்றத்தின் தலைவர் விகே மூர்த்தி தலைமையில் இந்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வுடன் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு துறையில் அனுபவம் பெற்ற ஷாலினி சுப்பிரமணியம் இப்பயிற்சியை வழிநடத்தினார்.

பத்துமலை தமிழ்ப்பள்ளியின் 4,5,6 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 500 மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்திருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று விகே மூர்த்தி கூறினார்.

இப்பட்டறை சிறப்பாக நடைபெறுவதற்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா முழு ஆதரவு வழங்கினார்.

இவ்வேளையில் அவருக்கும் மற்ற நல்லுள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இப்பயிற்சி பட்டறையை அடுத்து பேரா, சிலாங்கூரின் இதர பள்ளிக்களில் நடத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று மன்றத்தின் செயலாளர் நந்தகுமார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles