தமிழ்ப் பள்ளிகள் இடையிலான Mifa Beyond தேசிய கால்பந்து போட்டி! ஸ்ரீசங்கர் ஏற்பாடு குழு தலைவர்

சிரம்பான், நவ 21-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை நவம்பர் 22 ஆம் தேதி சிரம்பான் செண்டாயன் ஐஆர்சி அரங்கில் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான ஃமீபா பியோண்ட் தேசிய கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்த போட்டிக்கு ம இகா மற்றும் எம்ஐஇடி முழு ஆதரவு வழங்கி வருகிறது.

தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டியில் 20 குழுக்கள் சார்பில் 450 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதேசமயம் பாலர் பள்ளி பிரிவில் 70 மாணவர்கள் விளையாடுகிறார்கள் என்று மீபா தலைவர் அன்பானந்தன் தெரிவித்தார்.

சிரம்பான் பண்டார் செண்டாயான் ஐஆர்சி அரங்கில் நாளை நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் தமிழ்ப் பள்ளி கால்பந்து போட்டியை வெற்றி பெற மீபா துணைத் தலைவர் துவான் ஏஎஸ்பி இராஜேந்திரன் மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவின் அயராத முயற்சிகளை நான் பாராட்ட விரும்புகிறேன் என்று அன்பானந்தன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles