கம்போடியா அங்கோர் வாட்டில் கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!

சியாம் ரெப், நவ 22-
கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு இன்று இந்த கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

இந்த மாநாட்டில்
டத்தோ கண்ணா சிவக்குமார் தலைமையில் மலேசிய பேராளர் குழு கலந்து கொண்டுள்ளது.

கடாரம் கொண்டான் அனைத்துலக மாநாடு இன்று தொடங்கி 26ஆம் தேதி வரை கம்போடியா சியாம் ரீப்பில் நடைபெறவுள்ளது.

அங்கோர் தமிழ்ச் சங்கமும் தென்கிழக்கு ஆசிய பல்கலைக்கழக மும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளனர்.

உலகப் பேரரசன் இராஜேந்திர சோழன் கடாரம் வென்ற 1000ஆவது ஆண்டு விழா இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது.

உலக நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

டான்ஸ்ரீ ரடராஜா தலைவராக கொண்டுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் பேராளர்கள் குழு டத்தோ கண்ணா சிவகுமார் தலைமையில் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவக்குமார் தலைமையில் இக்குழு நேற்று சியாம் ரெப் சென்றடைந்துள்ளது.

இன்று காலையில் தமிழர்களின் பெருமையை நிலை நாட்டும் வகையில் மேளதாளம் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் அதிகாரப்பூர்வமாக தொடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles