3 மாதங்களில் தமிழ் மொழியில் வாசிக்க, எழுதக் கற்றுக் கொள்ளுதல்

கோலாலம்பூர், நவ.20-
திங்கள் சந்திப்புக் கூட்டம். ஒவ்வொரு திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர நிகழ்ச்சியாகும்.

இந்த முறை 3 மாதங்களில் தமிழ் மொழியில் வாசிக்க, எழுதக் கற்றுக் கொள்வது குறித்து சக்சஸ் பாத்வே அகாடமியின் தோற்றுநரும் தலைமைப் பயிற்றுநருமான திருமதி சோபனா ராமச்சந்திரன் அவர்கள் நம்முடன் அதற்கான விளக்கமளிப்புகளைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

இதில் தமிழ் மொழியைக் கற்பதற்கான நோக்கம், வகுப்புக்கான அட்டவணை, உள்ளடக்கப்பட்ட பாடங்கள், வகுப்புக்கான கட்டணம் உள்ளிட்ட இன்னும் பல விரிவான விளக்கமளிப்புகளைக் கல்வி மற்றும் சுய மேம்பாட்டுத் துறையில் 20 ஆண்டு அனுபவங்களைக் கொண்ட திருமதி.சோபனா வழங்குவார்.

ஆகவே, திங்கட்கிழமை (நவம்பர் 24ஆம் தேதி) இரவு மணி 7.45 தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இலவச சந்திப்புக் கூட்டத்தில் இணைந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
ZOOM ID: 878 2811 0295
PASSCODE: 12345

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles