
பண்டார் பூச்சோங் ஜெயாவில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் இறுதியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஹியான் ஹான் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த வழிபாட்டு தளத்தின் கட்டுமானம் கின்ராராவில் உள்ள நமது சமூகத்தின் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகும் என்று இங் ஹியான் ஹான் தெரிவித்தார்.
சிலாங்கூரில், பன்முகத்தன்மை நமது பலம். இந்த கோயில் அதன் அனைத்து பக்தர்களுக்கு ஒற்றுமை மையமாக விளங்கட்டும் என்று அவர் சொன்னார்

