

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 28-
நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த வர்த்தக சங்கமாக விளங்கும் சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தக சங்கத்தின் 2025 ஆம் ஆண்டு தீபாவளி விருந்து நிகழ்ச்சி கொண்டாட்டம் நேற்று பத்துகேவ்ஸ் ஷாங்கா மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
சபா சட்டமன்ற தேர்தல் காரணமாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கலந்து கொள்ள இயலவில்லை. அவரின் சார்பில் அரசியல் செயலாளர் மற்றும் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிச்சேல் இங் மேய் ஸி கலந்து சிறப்பித்தார்.
சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஷ் ராகவன் , மிச்சேல் இங், விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் பன்னீர் செல்வம் , துணை தலைவர் பிரபாகரன் மற்றும் செயலாளர் மோகனா சின்னத்தம்பி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ இராமநாதன், ஆட்சிக் குழு உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், ராம், செல்வராஜ், டோனி உட்பட ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மிம்தா தலைவர் டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம், மிம்தா செயலாளர் முத்தப்பன், டத்தோ ஆணி முத்து, டான்ஸ்ரீ பூவன், டான்ஸ்ரீ பாலன், டத்தோ தமிழ் செல்வம், கிள்ளான் சேகர், டத்தோ பாஸ்கரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஆடல் பாடல் இன்னிசை விருந்துடன் நடைபெற்ற இந்த விழாவில் 500 க்கும் மேற்பட்டோர் மழையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் – கூட்டரசு பிரதேச இந்திய வர்த்தக சங்கத்தின் உதவித் தலைவர் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் பன்னீர் செல்வம் இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.

