பேராக் இந்திய ஊடகவியலாளர்களின் சமூகநலம், கலை பண்பாட்டு, விளையாட்டுத்துறை சங்கம் தொடக்கம் கண்டது!

ஈப்போ, நவ.28: எனக்கும் மற்றவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எனக்கு யாரும் எதிரிகள் கிடையாது. இந்த இந்திய சமூகத்திற்கு என்னால் முடிந்தளவு உதவிகள் செய்வதுதான் உன்னத நோக்கம் என்று பேராக் இந்திய ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் கூறினார்.

தற்போது 3 வது முறையாக இம்மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராக சேவையாற்றி வருகிறேன். அமரர் பட்டு எனது அரசியல் ஆசான்; வி.டேவிட் என் தொழிற்சங்க குரு என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இரு மகான்களின் வற்புறுத்தலால் லண்டன் சென்று சட்டத்துறையை கற்று வழக்கறிஞராக உருவானேன். அதன் பின் மைக்கா ஹோல்டிங்ஸ் வாயிலாக அரங்கேறிய அட்டகாசங்களை காண நேர்ந்த்து. இந்தியர்கள் இந்நாட்டில் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்து விடியற்காலைவரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்த சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

பேராக்கில் இந்திய சமூகத்தின் பிரச்சினைகள் தீர்வு காணும் பொருட்டு பேராக் மந்திரி பெசாரிடம் ” இந்திய சமூகநலத்துறையை” நிறுவ கோரிக்கை மனு வைக்கப்பட்டு, இறுதியில் நிறைவு பெற்றதாக அவர் சொன்னார்.

இந்நிகழ்வில், பேராக் நகைக்கடை சங்க தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கலந்து சிறப்பித்தார். அவரும் சிறப்பிக்கப்பட்டார். பேராக் இந்திய ஊடகவியலாளர்களின் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles