6,000 ஆசிரியர்கள் துணையோடு 80,000 மாணவர்களுக்கு சமயக் கல்வி இலக்கு!மலேசிய இந்து தர்ம மாமன்றம் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 30-
தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக சமயக் கல்வியை போதிக்க வேண்டும் என்று மலேசிய இந்து தர்ம மாற்றத்தின் தலைவர் ரிஷி குமார் தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு சமயக் கல்வி அவசியமாகும்.

அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளில் சமயக் கல்வி போதிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.

தமிழ்ப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியம் சமயக் கல்வி போதிக்க எங்களுக்கு பக்கம் பலமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

பள்ளியில் விளையாட்டு போட்டி இடம் பெறாவில்லை என்றால் குரல் கொடுக்கிறோம்.

ஆனால் சமயக் கல்வி பற்றி யாரும் குரல் கொடுப்பது இல்லை.

இந்நிலை மாற வேண்டும். கடந்த 43 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிகளில் சமயக் கல்வி போதிக்க வேண்டும் என்று மலேசிய இந்து தர்ம மாற்றம் போராடி வருகிறது.

சமயக் கல்வி போதிக்க மலேசிய இந்து தர்ம மாமன்றம் பாடப் புத்தகத்தை தயாரித்துள்ளது.

அண்மையில் பினாங்கு மாநிலத்தில் பிறை முனீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் ஆதரவோடு சமயக் கல்வி புதிர் போட்டி நடைபெற்றது .

இதில் பினாங்கை சேர்ந்த 28 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது.

தமிழ்ப் பள்ளிகளில் சமயக் கல்வியை போதிக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய இந்து தர்ம மாமன்றம் அடுத்த ஆண்டு 6,000 ஆசிரியர்கள் உதவியோடு 80,000 மாணவர்களுக்கு சமயக் கல்வி போதிக்க திட்டம் வகுத்துள்ளது.

இதற்கு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை என்றார் அவர்.

இன்று அம்பாங்கில் உள்ள ஆதி சங்கரர் திருமடத்தில் நடைபெற்ற மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பேரவை கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles