


இலங்கையில் தொடர் கனமழை காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்னும் பலர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது. காணாமல் போன மக்களை தேடும் பணிகளும் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக குடியிருப்பு வீடுகள் ,விவசாய நிலங்கள் மூழ்கி உள்ள நிலையில் உணவு,உடை, மருந்து போன்ற அடிப்படை பயன்பாட்டு பற்றாக்குறையால் மக்கள் தவிக்கின்றனர். குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளான திருகோணமலை, பதுளை, மாத்தறை, மட்டக்களப்பு, கண்டி நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
கனமழை வெள்ளத்தால் போக்குவரத்து சேவை முற்றிலும் தடைபட்டுள்ளதோடு , மக்களின் தினசரி வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது. இந்த சூழலில் பல நாடுகள் நிவாரண உதவிகளை அறிவித்த வேளையில் மலேசிய அரசாங்கமும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மனிதநேயம் என்ற அடிப்படையில் மலேசிய அரசாங்கம் கடந்த காலங்களில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு உதவி வழங்கியுள்ளதை போல , இலங்கை வாழ் மக்களுக்கு,
குறிப்பாக ஈழத்தாயக தமிழர்கள் மறுவாழ்விற்குத் உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கணேசன்
உரிமை அரசியல் இயக்கம்.

