


கோலாலம்பூர் நவ 30-
மலேசியாவில் மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி வரலாற்றில் நேற்று புதிய மைல்கல் என்று கூறலாம்.
டாக்டர் நூரில்ஹாம் மனிதநேயம் வரலாற்று, தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
மலேசியாவில் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் மற்றும் உயர்கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது அமைந்துள்ளது என்று மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோர்ஜ் தோமஸ் தெரிவித்தார்.
நேற்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் நூரில்ஹாம் இந்த பட்டத்தை பெற்றது
மலேசிய பார்வையற்றோர் சங்கம் (MAB) பெரும் மகிழ்ச்சியடைகிறது என்று அவர் சொன்னார்.
பார்வையற்ற டாக்டர் நூரில்ஹாம் பின் இஸ்மாயில், நேற்று நவம்பர் 29, 2025 தேதி மலாயா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மனிதநேயம், வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் தனது முனைவர் பட்டத்தை பெற்றதோடு புதிய அத்தியாயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த சாதனை விடாமுயற்சி, சம வாய்ப்பு மற்றும் உள்ளடக்கிய கல்வி பாதைகளின் முக்கியத்துவத்திற்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்.
அவரது பயணத்தின் வெற்றியைக் காண்பதில் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மனிதவள அமைச்சர் YB ஸ்டீவன் சிம்மும் வருகை தந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
அமைச்சர் ஸ்டீபன் சிம் ஊக்கமும் அன்பும் இந்த சாதனைக்கு பெரிதும் பங்களித்துள்ளன,
மேலும் அவர் விழாவில் கலந்து கொண்டது எங்களுக்கு எல்லையில்லா ஆனந்தமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி எனும் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் நூரில்ஹாம் தமக்கு உதவி புரிந்த மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம் மற்றும் மலேசிய கண் பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோர்ஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

