கவியரசி மனோகரன் மருத்தவரானார்

பீடோர், டிச.1: கவியரசி த/பெ மனோகரன் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் (UKM) மருத்துவத்துறையில் பட்டம் பெற்றார் (DOCTOR OF MEDICINE).

இவர் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவியாவார்.

கடந்த 2013ல், யுபிஎஸ்ஆர் தேர்வி்ல் 7ஏ பெற்றவர். (பள்ளியின் சிறந்த மாணவி). அதன் பின் இடைநிலைப்பள்ளியான
SMK SYEIKH ABDUL GHANI, BIDOR
2016 ல், பிதி3 தேர்வில்10 ஏ பெற்றார். பள்ளியின் சிறந்த மாணவியானார்.( தமிழ்மொழி ஏ)

அதோடு கடந்த 2018 ல், எஸ் பி எம் தேர்வில்11ஏ கிடைக்கபெற்றவர்.
(தமிழ்மொழி ஏ+ & தமிழ் இலக்கியம் ஏ+) அத்துடன்,
பள்ளியின் SPM 2018 தேர்வில் சிறந்த மாணவி
பள்ளியின் எல்லா நிலைகளிலும் சிறந்த மாணவி (TOKOH MURID 2018)

அதோடு, 2018 ல் St.John Ambulans Kawasan Perak Selatan ( Training Officer) சேவையாற்றியவர்.
மத்திய அரசின் (JPA SCHOLARSHIP) உபகாரச் சம்பளத்தில் படித்தவர். பரதம் பயின்றவர்.திருமுறை ஓதும் போட்டியில் தேசிய நிலையில் பங்கு கொண்டவர்.

தந்தை ந.மனோகரன் பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர். தாயார் திருமதி மு.மணிமேகலை பீடோர் SMJK CHOONG HUA இடைநிலைப்பள்ளியில் ஆசிரியர் (GURU KAUNSELOR) ஆவார். இவரின் சகோதரர் முருகன் மனோகரன் இதே பல்கலைக்கழகத்தில் (UKM) மருத்துவத்துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles