ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகளை அகற்ற உத்தரவை திரும்ப பெறுங்கள்!

ஜொகூர் பாரு, டிச 2-

ஜொகூர் தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகள் அகற்றும்படி உத்தரவு பிர
பிறப்பிக்கபட்டதாக கூறப்படும் செய்திஅதிர்ச்சி மற்றும் கவலை அளிப்பதாக சமூக ஆர்வலருமான திரு சந்திர சேகர ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் மாநிலத்தின் சில தமிழ்ப்பள்ளிகளில் நிறுவப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைகளை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது என அவர் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சான்றோர்களின் நெறிப்பயிற்சிக்கும், அறநெறி மதிப்புகளுக்கும் உலகளவில் அடையாளமான திருவள்ளுவரின் சிலைகள் தமிழ்ப்பள்ளிகளில் அமைந்திருப்பது, மாணவர்களின் பண்பாட்டு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானது.

இந்த அளவுக்கு செறிவான விவகாரத்தில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான திரு ரவின் குமார் கிருஷ்ணசாமி மௌனம் காப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் சமூகத்தின் பண்பாட்டு மரியாதைக்கு இது நேரடியான தாக்கமாகும் என கூறிபிட்ட திரு சந்திர சேகரன்

இந்த விவகாரம் குறித்து தெளிவான விளக்கத்தை ஜொகூர் மாநில கல்வித்துறை உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர் சமூகத்தினருடன் சந்தித்து வெளிப்படையான தகவலை வழங்குவது அவசியம்.

இந்தப் பிரச்சினையால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மலேசியத் தமிழ் சமூகம் முழுவதும் தேவையற்ற பதற்றத்தில் உள்ளனர். எனவே, மாநில கல்வி இயக்குனருடன் விரைவில் சந்திப்பு ஒன்றை நடத்தி, உண்மையான நிலைமையை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles