
இன்று டிக் டோக்கில் வைரல் ஆகிவரும் புக்கிட் கெமுனிங் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வ வழிப்பாட்டு சிலைகளும் முறையாக அகம விதிக்கு உட்பட்டு அனைத்தும் இடம் மாற்றம் செய்து விட்டதாகவும் உடைந்த நிலையில் இருக்கும் அச்சிலையானது கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு சிலை என்பதுடன் அச்சிலை அகற்ற முடியாத சூழ்நிலையில் அங்கே இருக்கமான கம்பிகளை கொண்டு பிணைக்கப்பட்டிருந்ததால் அச்சிலையை மட்டும் ஆலய நிர்வாகம் அகற்றாமல் விட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஆலய நிர்வாகமும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சாம்புநாதனின் அறிவுறுத்தலின் பெயரில் புதிய இடத்திற்கு மாறி செல்வதற்கான உத்தரவாதத்தை தந்ததுடன்,இடம் மாறுவதற்க்கு முன்பாக அனைத்து சிலைகளையும் முறையாக இந்து அகம விதிபடி அகற்ற வேண்டும் என்று சட்டமன்ற மன்ற உறுப்பினரின் ஆலோசனையின் பெயரிலேயே அனைத்து சிலைகளையும் ஆலய நிர்வாகம் அகற்றதாகவும் அதற்கு ஆதரமாக சில புகைப்படங்களையும் அவர்கள் செய்தியாளர்கள் முன்னிலையில் வழங்கினர்.
அதேவேளை பொது மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களையோ,செய்திகளையோ அல்லது தனி நபர் குற்றச்சாட்டுகளையோ முறையாக விசாரித்தப்பிறகு பகிரவோ அல்லது நம்பும் படியும் ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.

