
பேராக் ஈப்போ குனோங் சீரோ, கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச விழாவில் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் உட்பட 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு தைப்பூச விழாவின் கோலாகல நிகழ்வுகளில் பங்கேற்பதற்குரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக ஆலயத் தலைவர் எம்.விவேகாந்தா தெரிவித்தார்.
முந்தைய ஆண்டுகள் போல் கோவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் எதுவும் இம்முறை விதிக்கப்படாதக் காரணத்தால் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் இம்முறை நடைபெறும் தைப்பூச விழாவில் கலந்து தங்கள் நேர்த்திக கடனைச் செலுத்த அதிகமானோர் வருகை புரிவோர்கள் என அவர் சொன்னார்.
புந்தோங், சுங்கை பாரி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து கல்லுமலை ஆலயம் வரையிலான ஊர்வலத்தில் சுமார் 1,000 காவடிகள் பங்கேற்கும் என்றார்

