
தைப்பூசத்தை கொண்டாடும் பக்தர்கள் குறைவான தேங்காயை உடைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேங்காய் உடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பணம், இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது என அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் தெரிவித்தார்.
தைப்பூசத்தின் போது தேங்காய் உடைப்பது இந்து பக்தர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரிய சடங்கு.
அந்த வகையில் குறைவான தேங்காயை உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றலாம்.
அதே சமயம் அதிக விலைக்கு தேங்காயை விட்டால் அதை வாங்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்

