
பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியாவில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் இவ்வாண்டும் தண்ணீர் பந்தலை அமைத்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுவையான பானங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார்கள்.
மலேசிய நண்பன் பத்திரிகையின் முன்புறத்தில் தமிழக தொழிலாளர்களின் தண்ணீர் பந்தல் மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு பல வகைகளில் உதவி புரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

