கூட்டரசு பிரதேசத்தில் தமிழ்ப் பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை
பத்து எம்.பி. பிரபாகரன் தொடக்கி வைத்தார்

கூட்டரசு பிரதேசத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளை தத்தெடுக்கும் ஒரு அற்புதமான திட்ட குழுவை பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் இன்று அதிகாரப்பூர்வ தொடக்கி வைத்தார்.

விலாயா மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளர்கள், கல்விமான்கள், பொது அமைப்புகளின் தலைவர்கள் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Sekolah Bantuan எனப்படும் அரசு முழு உதவிப்பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மானியங்கள், உதவிகள் நேரடியாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதே சமயம் bantuan model எனப்படும் உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளுக்கு எந்த வகையில் உதவிகளை பெற்றுத் தருவது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இந்த திட்டத்தில் அடங்கும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles