பினாங்கு தைப்பூசத்தில்
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்!
தங்கரதம் நாளை அதிகாலை புறப்படுகிறது

பினாங்கு மாநிலத்தில் மிகவும் பிரபலமான பால தண்டாயுதபாணி ஆலயத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்தார்.

நாளை கொண்டாடும் பினாங்கு தைப்பூசம் ஒரு சமய விழாவாகவும் அதே சமயம் தூய்மையாகவும் இருக்கும் என்றார் அவர்.

நாளை அதிகாலை ஐந்து மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்கரதம் புறப்பட்டு நள்ளிரவு ஆலயம் வந்தடையும்.வழி நெடுகிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வார இறுதியில் தைப்பூசம் கொண்டாடப்படுவதால் பல லட்சக்கணக்கான மக்கள் பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles