
மலேசியா தொழிலாளர் கூட்டுறவு நாணய சங்கம் பொறுப்பாளர்கள் நேற்று முன்தினம் தொழில் முனைவர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களை சந்தித்து கௌரவித்து பாராட்டினை தெரிவித்தனர். சங்கத்தின் தலைவர் தங்கராஜ் தலைமையில் அவர்கள் சரஸ்வதியை சந்தித்து கூட்டுறவு குறித்த விளக்கத்தை தெளிவு படுத்தினர்.
சங்க உறுப்பினர்கள் சங்கம் வழங்கும் ஆதரவு மற்றும் அதன் மூலம் சங்கத்தின் செயல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். எதிர்காலத்தில் அச்சங்கம் மேலும் சிறப்பாக செயல்பட அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்

