வெள்ளிரத ஊர்வலத்தை முன்னிட்டு
ம இகா சார்பில்
தண்ணீர் பந்தல்

பிப்ரவரி 3.2.2023 வெள்ளிக்கிழமை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மஇகாவின் தண்ணீர் பந்தல் போடப்பட்டுள்ளது.

மஇகா தலைமையகம் அன்று இரவு 11.00 மணி முதல் கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள பெர்கிம் கட்டிடத்திற்கு முன்னால் ரத ஊர்வலம் அந்த இடத்தை வந்தடையும் போது முருகப் பெருமானுக்கு பூஜைகள் அளித்து வழிபடுவதற்காக தண்ணீர் பந்தலை ஏற்பாடு செய்துள்ளது.

இது தேசிய மஇகாவின் பாரம்பரிய நிகழ்ச்சியில் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.

ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அவர்களின் தலைமையில்
ம.இ.காவின் தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ மு.சரவணன்,
ம.இ.காவின் தேசிய
உதவித்தலைவர்களும்
ம.இ.காவின் மத்திய செயற்குழு உறுப்பினர்களும்
ம.இ.காவின் மாநில தலைவர்கள் மற்றும் மாநில ஆட்சி குழு உறுப்பினர்கள்
தொகுதி காங்கிரஸ் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள்
கலந்து கொள்வார்கள்.

நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் பொருட்டு கிளை தலைவர்கள், கிளை நிர்வாகிகள், இளைஞர் பகுதி தலைவர்கள், மகளிர் பகுதி தலைவிகள், புத்ரா தலைவர்கள், புத்ரி தலைவிகள் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்பது மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அவர்களின் வேண்டுகோள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles