ஈப்போ ஸ்ரீ முருகன் நிலையம் 2026 ம் ஆண்டிற்கான பதிவு தொடங்கியது! டாக்டர் தினேஸ் சிறப்பிக்கப்பட்டார்…

ஈப்போ, டிச.5: ஈப்போ ஸ்ரீ முருகன் நிலையம் 2026 ம் ஆண்டிற்கான மாணவர்கள் பதிவை தொடங்கியது. இந்த தொடக்க விழாவில் ” பின்சோ” இயக்க துணைத்தலைவரும், பேராக் இந்திய பேட்மிண்டன் மன்ற தலைவரும், கிந்தா இந்தியர் சங்க உதவித்தலைவரும்மீனாட்சி திரவல் ஏஜென்சி உரிமையாளருமான நா.லோகநாதன் ” பின்சோ” இயக்கத்தின் சார்பில் நிதியுதவி வழங்கி தொடக்கி வைத்தார்.

ஸ்ரீ முருகன் நிலையம் இந்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பட்டதாரிகளாக உருவாக்கியுள்ளனர்.

இந்த வளர்ச்சிக்கும் கல்வி மேம்பாட்டிற்கும் உதவி நல்கியவர் ஸ்ரீ முருகன் நிலையத்தை உருவாக்கிய மறைந்த டான்ஸ்ரீ எம்.தம்பிராஜா என்று அவரை பாராட்டினார்.

கல்வியால் மட்டுமே நமது இந்திய சமூகம் மேம்பாடு காணமுடியும்.

அதன் அடிப்படையில் கல்விக்கு முன்னுரிமையும், முக்கியதுவம் வழங்கி பல இந்திய குடும்பங்களை வாழ வைத்த பெருமை ஸ்ரீ முருகன் நிலையத்தையே சாரும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனையில் தற்போது டாக்டராக பணியாற்றி வரும் டாக்டர் தினேஸ் மகாதேவன் இங்குள்ள ஸ்ரீ முருகன் நிலையத்தில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதியவர்.

அவர் இங்கே படித்து மருத்துவராகி உருவாகி இன்று நம்மோடு அமர்ந்துள்ளார்.

இதுதான் ஸ்ரீ முருகன் நிலையம் மற்றும் அவரது பெற்றோர்களின் வெற்றி என்று அவர் பாராட்டினார்.

வரும் ஆண்டில் ஈப்போ ஸ்ரீ முருகன் நிலையத்தில் படிக்க மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, ஆண்டு 5,6,படிவம் 1,2, மற்றும் 3 மாணவர்கள் தங்களை பதிவு செய்துக்கொள்ள வரவேற்கப்படுவதாக ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநரும், ஈப்போ ஸ்ரீ முருகன் நிலைய ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சேகர் நாராநயணன் கேட்டுக் கொண்டார்.
தொடர்புக்கு: 012-4662879; 012-4299895.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles