பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்!

கோப்பெங், டிச. 6: இந்நாட்டிலுள்ள பள்ளிகளில் பகடிவதை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். இதனால் மாணவர்கள் பல பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர்.

இவ்விவகாரத்தை அரசு மலேசியா போலீஸ்துறை கடுமையாக எதிர்கொள்வதாக இங்குள்ள கோத்தாபாரு தோட்டத்தமிழ்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வி்ல் கலந்துக் கொண்ட போது கம்பார் மாவட்ட போலீஸ்படை தலைவர் சூப்ரிடெண்டன் முகமட் நஸ்ரி டவுட் கூறினார்.

பள்ளிகளில் வன்செயல்கள் மற்றும் பகடிவதை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போலீஸ் தரப்பினர் பல வகையான கையாண்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பல கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே சமூகவியல் பிரச்சினைகள் உருவாகாமல் இருக்கும் பொருட்டு பள்ளி நிர்வாகத்துடன் போலீஸ் தரப்பினர் நல்லதொரு உறவை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பள்ளிக்கும் வட்டார காவல் நிலையங்களுக்கு சிறந்த ஒரு உறவுகள் மேம்படுத்துவதுடன் அடிக்கடி பள்ளி சுற்றுப்புறத்திலும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் பெற்றோர்களும் முழு பொறுப்புடன் தங்கள் பிள்ளைகளின் செயல்நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பது அவசியம் என்று அவர் அறிவுறுத்தினார்.

இப்பள்ளியின் தலைமையாசிரியர் மு.மகேந்திரன் தலைமையில் இந்த பரிசளிப்பு நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பள்ளியின் பள்ளி மேலும் வாரியத்தலைவர் எஸ்.தினேஸ் மற்றும் துணைத்தலைவர் குத்தகையாளர் ரமேஸ் ஆகியோர் இப்பள்ளியின் துரித வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர்.

இவர்களும் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.

இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குணா மற்றும் அவரது நிர்வாகத்தினர் இப்பள்ளியின் தேவையை அறிந்து
செயல்பட்டு வருகின்றனர். இந்நிகழ்வில் கடந்த ஓர் ஆண்டாக மாணவர்களின் படைப்பு மற்றும் அடைவுநிலை குறித்து இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles