

கோலாலம்பூர் டிச 7-
2025 ஆம் ஆண்டுக்கான
நம்பிக்கை நட்சத்திர விருது விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நம்பிக்கை நட்சத்திர விருது விழா கடந்த வாரம் இறுதியில் மிகவும் பிரமாண்டமான முறையில் தலைநகரில் நடைபெற்றது.
இவ்விழாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
சிறந்த மூத்த விளையாட்டாளருக்கான விருது டத்தோ சந்தோக் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது கராத்தே வீராங்கனை ஷாமளா ராணிக்கு வழங்கப்பட்டது.
அண்மையில் நடைபெற்ற உலக சீனியர் கராத்தே போட்டியில் ஷாமளா ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிறந்த சமூக இயக்கத்திற்கான விருது பெட்டாலிங் மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு வழங்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கம் வெற்றிகரமாக சிலாங்கூர் – விலாயா தமிழ்ப் பள்ளிகள் இடையிலான கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது.
ம இகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நம்பிக்கை விருதுகள் வழங்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் பத்துமலை இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

