கைத்தொலைபேசியை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! பிபிபி கட்சி வலியுறுத்து

கோலாலம்பூர் டிச 7-
மாணவர்கள் கைத்தொலைபேசியை தவறாக பயன்படுத்துவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிபிபி கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர்கள் பயன் படுத்தும் கைத்தொலைபேசியை பெற்றோர்கள் பெயரில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த கைத் தொலைபேசியில் விடியோ கேம்ஸ் இருக்கக்கூடாது.

16 வயதுக்கு கீழ்ப்பட்ட மாணவர்கள் பயன் படுத்தும் கைத்தொலைபேசியை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

தேவையில்லாக Wepp இந்த கைத்தொலைபேசியில் இருக்கக் கூடாது.

மேலும் தேவைக்கு மட்டுமே இந்த கைத்தொலைபேசியை மாணவர்கள் பயன் படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.

இன்று நடைபெற்ற பிபிபி கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles