ஆசியாவின் சிறந்த கல்வி சேவைக்கான விருதை Beyond Education நிறுனம் மீண்டும் வென்று சாதனை!

பேங்காக், டிச 7-
ஆசிய கல்வி விருதளிப்பு விழாவில் சிறந்த மருத்துவ கல்வி சேவைக்கான விருதை பியோன்ட் மலேசியா கல்வி நிறுவனம் மீண்டும் வென்றுள்ளது.

ஆசிய கல்வி விருது விழா தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெற்றது.

கல்வித் துறையை சேர்ந்த பலருக்கு இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் கல்விக்கான சிறந்த சேவை விருதை பியோன்ட் மலேசியா கல்வி நிறுவனம் மீண்டும் வென்றது.

அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் விக்னேஷ் அவ்விருதை பெற்றுக் கொண்டார்.

மாணவர்களுக்கு உயர் கல்வி மிகவும் முக்கியமாகும். அக்கல்வியை மாணவர்கள் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வகையில் அம்மாணவர்களுக்கு அனைத்து விதமான வழிகாட்டல்களையும் பியோன்ட் கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது.

இன்று வரை கல்வி, நிதி ஆலோசனை சேவைகள் மூலம் 4,598 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நாங்கள் ஆதரவளித்துள்ளோம்.

அவர்களின் படிப்பு விருப்பங்களை வழிநடத்தவும், உயர்கல்வியின் வழியில் பெரும்பாலும் நிற்கும் தடைகளை கடக்கவும் உதவுகிறோம்.

இதன் அடிப்படையில் தான் இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது எங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles